திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.

0
திருவண்ணாமலை காா்த்திகை மகா தீபத் திருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை (டிச.13) மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது விண்ணைப் பிளக்கும் அரோகரா முழக்கங்களுடன் மகா தீபம் ஏற்றப்பட்டது.

சன்னிதியில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் வெளிவந்து, ஆனந்தத் தாண்டவத்துடன், கொடி மரத்தை வலம் வந்து மீண்டும் சன்னிதிக்குள் திரும்பும் காட்சியைப் பக்தர்கள் பரவசத்துடன் தரிசித்தனர்.

பக்தர்கள் வெள்ளம்
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் காணும் இடமெல்லாம் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளிக்கிறது. பக்தர்களின் பாதுகாப்புக் கருதி ஆயிரக்கணக்கான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விழாவுக்காக, தீபம் ஏற்றப் பயன்படுத்தப்படும் மகா தீபக் கொப்பரை, வியாழக்கிழமை மலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

மகா தீபக் கொப்பரை மலைக்குப் பயணம் மகா தீபக் கொப்பரைக்கு வியாழக்கிழமை அதிகாலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

இதன்பிறகு, கோயிலில் இருந்து அம்மணி அம்மன் கோபுரம், வடக்கு ஒத்தவாடை தெரு வழியே மலையேறும் பாதைக்கு மகா தீபக் கொப்பரை கொண்டு செல்லப்பட்டது. கொட்டும் மழையையும் பொருள்படுத்தாமல் மலை மீது மகா தீபக் கொப்பரை கொண்டு சென்று வைக்கப்பட்டது.பரணி தீபம்
வெள்ளிக்கிழமை (டிச.13) அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சந்நிதியில் ஏற்றப்பட்ட பரணி தீபத்தை சிவாச்சாரியா்கள் கைகளில் சுமந்தபடி, கோயில் இரண்டாம், மூன்றாம் பிரகாரங்கள், உண்ணாமுலையம்மன் சந்நிதிகளில் வலம் வந்தனர். பக்தா்கள் வழிபட்ட பிறகு, பரணி தீபம் மீண்டும் கோயிலுக்குள் எடுத்துச் செல்லப்பட்டது.

திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, பக்தர்கள் மலையேறுவதற்கு இந்தாண்டு அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
To Top