நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை
December 15, 2024
0
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகாவில் உள்ள நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான கிறிஸ்துமஸ் கீத ஆராதனை விழா நடைபெற்றது. நாசரேத் தூய யோவான் பேராலய தலைமை குரு ஹென்றி ஜீவானந்தம் ஜெபித்து கீத ஆராதனையை துவக்கி வைத்தார். தலைமையாசிரியர் குணசீலராஜ் வரவேற்றார். பள்ளி ஆசிரியர்கள் கிறிஸ்துமஸ் சிறப்பு பாடல்களைப் பாடினர். தாளாளர் சுதாகர், உதவி தலைமையாசிரியை சாரா ஞானபாய் மற்றும் ஆசிரியர் பட்டுராஜன் ஆகியோர் கிறிஸ்துமஸ் வேதபாடங்களை வாசித்தனர். பேராலய தலைமை குரு ஹென்றி ஜீவானந்தம் கிறிஸ்துமஸ் செய்தி வழங்கினார். கிறிஸ்து பிறப்பின் மகிழ்ச்சியை யாவரும் கொண்டாட வேண்டும், நட்சத்திரங்களைப் போன்று ஒவ்வொருவரும் பிரகாசிக்க வேண்டும், நட்சத்திரங்கள் உணர்த்தும் உண்மைகளை உணர்ந்து கொள்ள வேண்டும் என்று தனது அருளுரையில் செய்தி வழங்கினார். ஆசிரியர்கள் அனைவருக்கும் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டது. கீத ஆராதனையில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கும், விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கும் கிறிஸ்மஸ் விருந்து வழங்கப்பட்டது. விழாவின் முடிவில், அனைவருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பகிரப்பட்டது. ஏற்பாடுகளை உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் திரவியம், இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ், ஆசிரியர்கள் ஸ்டீபன் பிரேம்குமார், வின்ஸ்டன் ஜோசுவா, அம்புரோஸ் சுகிர்தராஜ், உடற்கல்வி ஆசிரியர் தனபால், தேசிய மாணவர் படை அலுவலர் சுஜித் செல்வசுந்தர் மற்றும் ஓவியக்கலை ஆசிரியர் அலெக்ஸன் கிறிஸ்டோபர் ஆகியோர் செய்திருந்தனர்.
Tags