தூத்துக்குடி: நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் பசுமை தூய்மையாக்கல் பணி..

0
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகாவில் உள்ள நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் பசுமை தூய்மையாக்கல் பணி நடைபெற்றது. பள்ளியின் தலைமையாசிரியர் குணசீலராஜ் பசுமை தூய்மையாக்கல் பணிகளை துவக்கி வைத்தார். உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் திரவியம் மற்றும் பட்டதாரி கணித ஆசிரியர் நேசகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியின் தேசிய மாணவர் படை மாணவர்கள், பசுமை மன்ற மாணவர்கள் மற்றும் பிற மாணவர்கள் தூய்மையாக்கல் பணியில் ஈடுபட்டனர். பள்ளியின் மேற்கு புறத்தில் உள்ள தூய யோவான் பேராலயத்திற்கு அருகாமையில் அமைந்திருக்கும் வளைகோல் பந்து மைதானத்தின் வடக்கு பகுதி முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டது. தேவையற்ற நிலையில் வளர்ந்திருந்த களைச் செடிகள், மாணவர்கள் விளையாட்டுவதற்கு இடையூறாக இருந்த கற்கள் மற்றும் உடைந்த நிலையில் காணப்பட்ட தேவையற்ற பொருட்கள் ஆகியவை அப்புறப்படுத்தப்பட்டன. 
உடற்கல்வி இயக்குனர் பெலின்பாஸ்கர், உடற்கல்வி ஆசிரியர் தனபால், தேசிய மாணவர் படை அலுவலர் சுஜித் செல்வசுந்தர், இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ், ஓவியக்கலை ஆசிரியர் அலக்சன் கிறிஸ்டோபர், நிர்வாகப் பிரிவு ஆசிரியர் மேஷாக் ஆகியோர் மாணவர்களுக்கு தூய்மையாக்கல் பணியில் ஆலோசனைகள் வழங்கி, மேற்பார்வை செய்து வழிநடத்தினர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
To Top