நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலை பள்ளியில் மெகா தூய்மைப்பணி முகாம்..

0
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகாவில் உள்ள நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் மெகா தூய்மை பணி முகாம் நடைபெற்றது. பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர்கள் சாரா ஞானபாய் மற்றும் சார்லஸ் திரவியம் ஆகியோர் முகாமினை துவக்கி வைத்தனர். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஜெய்சன் சாமுவேல், சாரணர் இயக்க பொறுப்பாளர் ஆபிரகாம் இம்மானுவேல், தேசிய பசுமை படை பொறுப்பாளர் அம்புரோஸ் சுகிர்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியில் அமைந்துள்ள கால்பந்து மைதானம், ஹாக்கி மைதானம் மற்றும் பள்ளியின் பின்புறம் உள்ள பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டன. தேவையற்ற நிலையில் வளர்ந்திருந்த புற்ச்செடிகள், பிளாஸ்டிக் நெகிழி கழிவுகள் மற்றும் வீணாகக் கிடந்த தாள்கள்  ஆகியவை தூய்மைப்படுத்தப்பட்டன. 
மெகா தூய்மை பணியில், நாட்டு நலப்பணித் திட்ட தொண்டர்கள், தேசிய மாணவர் படை வீரர்கள், சாரணர் இயக்க மாணவர்கள், தேசிய பசுமைப்படை மாணவர்கள் இளையோர் செஞ்சிலுவை சங்க  மாணவர்கள் ஆகியோர் பங்கு பெற்றனர். நாள் முழுவதும் மெகா தூய்மை பணி  நடைபெற்றது.மெகா தூய்மை பணி முகாமிற்கான ஏற்பாடுகளை, தேசிய மாணவர் படை அலுவலர் சுஜித் செல்வசுந்தர், இளையோர் செஞ்சிலுவை சங்க பொறுப்பாளர் ஜென்னிங்க்ஸ் காமராஜ், இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ், நாட்டு நலப்பணி திட்ட உதவி அலுவலர்கள் தனபால், ரீபைனர் மேஷாக் மற்றும் பசுமை தோட்ட  பாதுகாவலர் ஜெபஸ்டின் ஆகியோர் செய்திருந்தனர். மெகா தூய்மை பணியில் ஈடுபட்ட மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது. தூய்மை பணியில் ஈடுபட்ட மாணவர்களையும் பொறுப்பாசிரியர்களையும்  தாளாளர் சுதாகர், தலைமையாசிரியர் குணசீலராஜ், பிற ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பாராட்டினர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
To Top