இது குறித்து தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியேற்றுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: “கழக நிர்வாக வசதிக்காகவும் கழகப் பணிகள் செம்மையுடன் நடைபெற்றிடவும் ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள சட்டமன்றத் தொகுதிகள் மாற்றியமைக்கப்படுகிறது. புதிதாக பொறுப்பாளர்களும் நியமிக்கப்படுகிறார்கள் என்று அறிவித்துள்ளார். அதன்படி,
ஈரோடு தெற்கு - அமைச்சர் முத்துசாமி
ஈரோடு வடக்கு - என்.நல்லசிவம்
ஈரோடு மத்தி - தோப்பு வெங்கடாசலம்
திருப்பூர் கிழக்கு - க.செல்வராஜ்
திருப்பூர் மேற்கு - அமைச்சர் சாமிநாதன்
திருப்பூர் வடக்கு - என்.தினேஷ் குமார்
திருப்பூர் தெற்கு - இல. பத்மநாபன்
விழுப்புரம் வடக்கு - செஞ்சி மஸ்தான்
விழுப்புரம் தெற்கு - கெளதம சிகாமணி
விழுப்புரம் மத்தி - ஆர்.லட்சுமணன்
மதுரை வடக்கு - அமைச்சர் மூர்த்தி
மதுரை மாநகர் - கோ.தளபதி
தஞ்சாவூர் தெற்கு - பழனிவேல்
திருநெல்வேலி மத்தி - அப்துல் வகாப்
திருவள்ளூர் கிழக்கு - எம்.எஸ்.கே. ரமேஷ் ராஜ்
நீலகிரி - கே.எம்.ராஜு
ஆகியோர் தி.மு.க பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
4 மாவட்ட செயலாளர்கள் மாற்றம்
இதில், தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், நீலகிரி மாவட்டம், திருநெல்வேலி மத்திய மாவட்டம், திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் ஆகிய 4 மாவட்டங்களின் மாவட்டங்களில் இதற்கு முன்பு இருந்த மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.