தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்க கோபிசெட்டிபாளையம் வட்டக் கிளை உறுப்பினர்களின் அவசர கூட்டமானது நேற்று மொடச்சூர் சாரதா மேல்நிலைப்பள்ளியில் கோபி வட்டத் தலைவர் ஜெயந்தன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
தீர்மானங்கள்:
1) எந்த ஒரு அறிக்கை வேண்டுமென்றாலும் போதுமான கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும். கால அவகாசமின்றி அவசர அவசரமாக கொடுக்கப்படும் அறிக்கையாள் தவறு ஏற்ப்பட வாய்ப்பு உள்ளது..இதை தவிர்த்தல் வேண்டும்.
2) 1433- ம் வருவாய் தீர்வாக தொகையினை அணைத்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உடனடியாக வழங்கிட வேண்டும்..
3) நத்தம் நிலுவை ஆவணங்கள் இல்லாத தள்ளுபடி இனங்களுக்கு தனித்தனியா முன்மொழிவு அனுப்பும் நிலையில் கிராம கணக்குள்ளை நூல் எடுக்க செலவினத் தொகையினை வழங்குதல் குறித்தும் மேலும் நிலுவை இனங்கருக்கு இறுதியாக ஒரு முன் மொழிவு படிவம் அனுப்பிய பின்னர் நத்தம் நிலுவை பணிகள் மேற்கொள்ள இயலும்.
4) நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கிராம கணக்குகள் நகரநில அளவிையரிடம் உள்ளது. ஆனால் கிராம நிர்வாக அலுவலர்களை தொடர்ந்து பணி செய்வதை வற்புறுத்துவதை தவிர்த்தல்.
5) வாட்ஸ் அப் குழுவில் மிக அவசரம் என்று பதிவிட்டு விரைவாக பெறப்படும் அறிக்கையால் எங்களுக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்படுத்துகிறது. மேலும் எங்களது பணி சுமைகளை குறைக்கும் பொருட்டு அனைவரும் மேற்படி வாட்ஸ் அப் குருப்பில் இருந்து வெளியேறுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
6) கிராமஙங்களுக்கு புலத்தணிக்கைக்கு வரும் மேல் அதிகாரிகள் முந்தய நாளில் தகவல் தெரிவாத்தால் மட்டுமே கிராம கணக்குகள் தயார் நிலையில் வைக்க ஏதுவாக இருக்கும்.என்பதை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தீர்மானங்களின் நகல் (19.02.2025) இன்று கோபி வருவாய் வட்டாட்சியர் அவர்களிடம் வழங்கப்பட்டது.
இதில் செயலாளர் சரவணக்குமார், பொருளாளர் சுஜேஷ், நடராஜு, பாரூக் பாட்சா, அருண்குமார் மற்றும் கோபி வட்டத்தில் பணிபுரியும் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
செய்தி
ஆசிரியர் /வெளியீடு: வி கோவர்த்தனன்