இவ்விழாவில் உரிமையின் குரல் சமூக நலம் மற்றும் மகளிர் நல அமைப்பின் மாநில தலைவர் மற்றும் நிறுவனர் சரவணக்குமார் தலைமை தாங்கினார். மேலும் மாநில அமைப்பு செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்புரை நிகழ்த்தினார் அதைத்தொடர்ந்து மாநில செயலாளர் சாந்தமூர்த்தி தொகுப்புரையாற்றினார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் கலாதர் பார்த்தசாரதி அவர்கள் கலந்து கொண்டு கோவை தொண்டாமுத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நாராயணா இ- டெக்னோ பள்ளி, சைதன்யா டெக்னோ பள்ளி, அமிர்தா பள்ளி, லிட்டில் பிளவர் மெட்ரிக்குலேஷன் பள்ளி, ஈஷா வைஷ்யா மெட்ரிக் பள்ளி, விவேகம் மெட்ரிக்குலேஷன் பள்ளி, மற்றும் பல்லடம் புளூபேர்டு மெட்ரிக் பள்ளி ஆகிய பள்ளிகளில் படிக்கும் சுமார் 50 மாணவ மாணவிகளுக்கு சிறந்த மாணவ மாணவிகளுக்கான விருதை வழங்கினார்.
மேலும் இவ்விழாவில் மாநில துணைத் தலைவர் ராஜேஷ், மாநில கௌரவ ஆலோசகர்கள் மாரிமுத்து மற்றும் பக்தகுமார், மாநில துணைச்செயலாளர் மணிகண்டன், இளைஞரணி செயலாளர் காளீஸ்வரன், கொங்கு மண்டல செயலாளர் விஷ்ணு, கொங்கு மண்டல துணைச்செயலாளர் ரவிசந்தர் வர்மா, மாநில மகளிரணி செயலாளர் பவித்ரா, மகளிரணி ஒருங்கிணைப்பாளர் புவனேஸ்வரி மண்டல மகளிரணி அமைப்பாளர்கள் நாகஜோதி மற்றும் சித்ராதேவி, கோவை மாவட்ட மகளிரணி தலைவர் சுசீலா ராணி, மகளிரணி துணைச்செயலாளர் ஜென்சி, மண்டல அமைப்பாளர் சத்யகலா ஆகியோர் கலந்து கொண்டனர்.