வக்ஃப் மசோதாவை ஏற்கமாட்டோம் வக்ஃப் என்பது முஸ்லிம்களின் அரசியலமைப்பு உரிமை SDPI கட்சியின் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்..
அதன் ஒருபகுதியாக ஈரோடு வடக்கு மாவட்டம் SDPI கட்சி சார்பாக நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.
ஒன்றிய அரசின் வக்பு திருத்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ததை கண்டித்து கோபிசெட்டிபாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இக்கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் ஏ சமீருல்லா தலைமையில் நடைபெற்றது.மாவட்ட துணை தலைவர் ஏ அஜ்மல் ஹுசைன் வரவேற்புரையாற்றினார்.
மாவட்ட பொதுச்செயலாளர் ஏ எம் முஹஸீன் காமினூன் துவக்க உரை நிகழ்த்தினார்.
மாவட்ட செயலாளர் எம் மூசிர் கண்டன உரையாற்றினார்.இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் எம் தாவுத் அலி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.அப்துல் வஹாப், முஸ்தபா, தொகுதி செயலாளர் சர்ஜித் ரஹ்மான்,பவானிசாகர் தொகுதி செயற்குழு உறுப்பினர் சுலைமான்,கலிங்கியம் ஒன்றிய தலைவர் இல்லியாஸ், துணை தலைவர் சதக்கத்துல்லா, கோபி நகர செயலாளர் சர்புதீன், புளியம்பட்டி நகர தலைவர் எ முகமது அலி,கிளை தலைவர் பயாஸ் அஹமது மற்றும் நிர்வாகிகள் செயல்வீரர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இறுதியாக கோபிசெட்டிபாளையம் தொகுதி தலைவர் கே கலில் ரஹ்மான் நன்றி உரையாற்றினார்.