தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க,ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்றத் தொகுதி டி.என்.பாளையம் ஒன்றியம் கணக்கம்பாளையம் கிராமத்தில் வேதபாரை ஓடையின் குறுக்கே அமைந்துள்ள தடுப்பணை மறுகட்டுமானம் செய்யும் பணிகளுக்காக ரூபாய் 6 கோடியே 96 இலட்சம் நிதியும்,
தடப்பள்ளி வாய்க்காலிலுள்ள மதகுகள் குறுக்கு கட்டுமானங்கள் மற்றும் குறுக்கு வடிகால் அமைப்புகளை புனரமைக்கும் பணிகளுக்காக ரூபாய் 4கோடியே 30இலட்சம் நிதியும், அந்தியூர் ஒன்றியம் எண்ணமங்கலம் ஊராட்சி குசலாம்பாறை அருகில் வழுக்குப்பாறை பள்ளம் ஓடையில் வெள்ள தடுப்பு சுவர் அமைக்கும் பணிகளுக்காக ரூபாய் 1கோடியே 30 இலட்சம் என நிதி ஒதுக்கீடு செய்தமைக்காக
தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து அந்தியூர் சட்டமன்ற தொகுதி மக்களின் சார்பாக அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் சந்தித்து நன்றி தெரிவித்தார்.