இவ்விழாவிற்கு நம்பியூர் வட்டார கல்வி அலுவலர் ஸ்ரீ தேவி அவர்கள். குத்துவிளக்கேற்றி விழாவினை தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். இவ்விழாவில் கெட்டிசெவியூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே எம் மகுடேஸ்வரன் அவர்கள். கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றியும், வாழ்த்துரை வழங்கியும் பரிசுகள் வழங்கியும் சிறப்பித்தார். விழாவிற்கு ஜே வி மில் மேலாளர் பொன் விஸ்வநாதன் அவர்கள் விளையாட்டுப் போட்டிக்கான பரிசுகளை குழந்தைகளுக்கு வழங்கினார். கொளத்துப் பாளையம் சரஸ்வதி பழனிச்சாமி அவர்களின் புதல்வர் ப. சிவக்குமார் (U.S.A)அவர்கள் அனைத்து கல்வி செயல்பாடுகளுக்கும் குழந்தைகளுக்கு கேடயம் வழங்கி சிறப்பித்தார். இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரங்கராஜ் அவர்கள்.ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தார். மேலும் இவ்விழாவில் கெட்டிச் செவியூர் அரசு மாதிரி மேல் நிலைப் பள்ளியின் SMC கல்வியாளர் சம்பத்குமார் அவர்கள், கெட்டிச்செவியூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியின் PTA துணைத் தலைவர் சாமிநாதன் அவர்கள், நம்பியூர் வட்டார வள மேற்பார்வையாளர் செல்வராஜ் அவர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள், அருகாமை தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், இப்பள்ளியின் SMC தலைவி ராசாத்தி அவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பெற்றோர்கள் முன்னாள் மாணவர்கள் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
பள்ளியின் உதவி ஆசிரியர்கள் பா சம்பூர்ணம் அவர்கள்.மற்றும் எஸ் குடியரசி அவர்கள்.ஆகியோர் விழாவிற்கு வருகை புரிந்த மற்றும் நன்கொடை வழங்கிய நல் உள்ளங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்தனர்.